இந்தியாவின் முதல் 3D பிரிண்டிங் வீடு-IIT மெட்ராஸின் புதிய சாதனை

Default Image

இந்தியாவின் முதல் 3D பிரிண்டிங் வீட்டினை 5 நாட்களில் கட்டி IIT மெட்ராஸின் முன்னாள் மாணவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

ஐ.ஐ.டி மெட்ராஸின்,டுவாஸ்டா என்ற முன்னாள் மாணவர்கள் அமைப்பினர்,கான்கிரீட் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் முதல் 3 டி பிரிண்டிங் வீட்டைக் கட்டியுள்ளனர்.சுமார் 600 சதுர அடியில் கட்டப்பட்ட இந்த வீட்டில்,ஒரு படுக்கையறை,ஹால் மற்றும் ஒரு சமையலறை ஆகியவை உள்ளன.

இந்த கான்கிரீட் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பமானது ஒரு ஆட்டோமேட்டிக் செயல் முறையாகும்.இந்த நுட்பத்தில்,ஒரு கான்கிரீட் 3 டி அச்சுப்பொறி பயன்படுத்தப்படுகிறது.இதனால் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் மாடலை கணினியில் உருவாக்கி பின்னர் அந்த மாடலைக் கொண்டு நிஜத்தில் ஒரு 3D கட்டமைப்பிலான வீட்டை உருவாக்க முடியும்.

இந்த தொழில்நுட்பம் இந்தியா போன்ற வளரும் நாட்டில் ஒரு முக்கிய வளர்ச்சிப் பாதையின் படியாகும், ஏனெனில் இது கார்பன் மூலப்பொருட்களைக் குறைப்பது மட்டுமல்லாமல்,4 முதல் 5 நாட்களில் ஒரு வீட்டைக் கட்டும் வேகமான தொழில் நுட்பத்தின் காரணமாக கட்டுமான செலவைக் குறைக்கிறது.மேலும்,வழக்கமான கட்டுமான முறையை விட இந்த தொழில்நுட்பம்  சுமார் 30% செலவைகுறைத்து,கட்டிடத்தின் ஆயுளை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்க செய்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாட்டின் முதல் 3D பிரிண்டிங் வீட்டை மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் திறந்து வைத்து இதுகுறித்து கூறுகையில்,”IITயின் முன்னாள் மாணவர்களால் வெறும் ஐந்து நாட்களில் இந்த 3D பிரிண்டிங் வீடு கட்டப்படுள்ளது.இதைப்போன்று எங்களுக்கு விரைவான மாதிரிகள் தேவை.இதன்மூலம்,மலிவு விலையில் வீட்டுவசதி குறித்த இலக்கை அடைவதில் இந்தியா ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டுள்ளது.மேலும்,நாட்டிற்கு இதுபோன்ற அதிகமான இளம் கண்டுப்பிடிப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்”,என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்