டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (IIT) ஆராய்ச்சியாளர்கள் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான கையடக்க கருவியைக் உருவாக்கியுள்ளனர். இந்த கருவியானது ஒரு மணி நேரத்தில் டெங்கு சோதனை முடிவை வழங்குகிறது. புனே தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்(ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச் (NIMR) உடன் இணைந்து IIT ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான இரத்த மாதிரிகளை பரிசோதித்து ஒரு மணி நேரத்திற்குள் டெங்கு முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டனர்.
டெங்கு போன்ற பொதுவான நோய்களுக்கு விரைவான நோய் கண்டறிதல் கருவி தேவைப்படுகிறது, ஆனால் இதற்கு விலையுயர்ந்த உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தேவைப்படுகின்றன என்று டெல்லியின் IIT ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த ஆராய்ச்சி பணிகளுக்கு தேவையான நிதியுதவி ‘IMPRINT இந்தியா’ திட்டத்தின் மூலம் பெறப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.
இந்த புதிய கருவிப் பற்றி பேசிய பேராசிரியர் PM.சிங், “இந்த அல்ட்ரா-சென்சிட்டிவ் மற்றும் எளிமையான சாதனம் வைரஸ் நோய்களைக் கண்டறிந்து, ஒரு மணி நேரத்திற்குள் இறுதி முடிவுகளை வழங்கும் திறன் கொண்டுள்ளது”,என்று கூறினார்.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…