சீன பொருட்களை உபையோகிக்க வேண்டாம் என்று நாடுதழுவிய பிரச்சாரத்தை விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அறிவித்துள்ளது .
லடாக் எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியானது.
இந்த தாக்குதலுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது .இதன் ஒரு பகுதியாக சீன பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என்றும் அதை புறக்கணிக்க வேண்டுமென்று சமூக வலைத்தளம் முதல் வீதி வரை பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது .
சீன பொருட்களை உபையோகிக்க வேண்டாம் என்று நாடு தழுவிய பிரச்சாரத்தை விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது .இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே தெரிவிக்கையில் .
சீனாவின் முதுகெலும்பை உடைக்க “சீனப் பொருட்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளை முற்றிலுமாக புறக்கணிக்குமாறு பாரத மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், இதனால் டிராகனின்(Dragon) முதுகெலும்பு முற்றிலுமாக உடைந்து, அது முதுகெலும்பில்லாததாகிறது” என்று கூறினார் .
இதை நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் நடத்தப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…