உத்திரப்பிரதேசத்தில் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது குறிப்பிட்ட அளவு மதுபானத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினால், அம்மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும்.
உத்திரப்பிரதேசத்தில் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது குறிப்பிட்ட அளவு மதுபானத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினால், அம்மாநில அரசிடம் உரிமம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி உத்தரப்பிரதேசத்தில் திருத்தப்பட்ட கலால் வழிகாட்டுதலின்படி, ஒரு நபர் நிர்ணயிக்கப்பட்ட சில்லரை வரம்பு மீறி மதுபானங்களை வாங்கி கொண்டு செல்லவோ அல்லது வைத்திருக்கவோ, அரசிடம் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு நபருக்கு 6 லிட்டர் மதுபானம் மட்டுமே வைத்திருக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதைவிட அதிகமான மதுபானங்களை வாங்குவதற்கும், எடுத்துச் செல்வதற்கும் அல்லது வீட்டில் வைத்திருக்கவும் கலால் துறையிடம் உரிமை பெற்றுக் கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வைத்திருப்பவர்கள் மற்றும் தனிப்பட்ட நுகர்வோருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, நுகர்வோர் அதிகமான மதுபானம் வைத்திருப்பவர்கள் ஆண்டுதோறும் அரசுக்கு 12000 செலுத்தி உரிமம் பெற வேண்டும்.
மேலும் இதன் பாதுகாப்பு வைப்பு தொகையாக ரூ 50,000 அரசுக்கு டெப்பாசிட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கலால் துறை 2020-21 ஆம் ஆண்டில் ரூ.28,300 கோடிக்கு வருவாய் இலக்கை நிர்ணயித்த நிலையில், 2021 -22 ஆம் ஆண்டில் மாநில அரசு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல், அதாவது ரூ 34.500 கோடிக்கு மேல் வருவாய் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதன் விளைவாக சில்லறை மதுபான விற்பனையாளர்களுக்கான உரிமக் கட்டணத்தை 7.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அரசின் இந்த செயல் குடிமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…