மேற்குவங்க மாநிலத்தை நீங்கள் விளையாட்டு மைதானமாக நினைத்தால், நான் கோல் கீப்பராக இருப்பேன் – மம்தா பானர்ஜி

சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன்.
இன்னும் ஒரு சில மாதங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் ஹுக்ளியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய கலகக்காரர். அமித்ஷாவும், நரேந்திர மோடியும் நாடு முழுவதும் பொய்யையும் வெறுப்பையும் தான் பிரச்சாரம் செய்து வருகின்றனர். வன்முறை மூலம் எதையும் சாதிக்க முடியாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இதைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி எதிர் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலில் பாஜக மேற்கு வங்காளத்தை விளையாட்டு மைதானமாக நினைத்தால், இந்த தேர்தலில் நான் கோல் கீப்பராக இருப்பேன். பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என்றும், வங்காளம் மட்டுமே வங்காளத்தை ஆளும் என்றும், பாஜக மேற்குவங்கத்தில் தோல்வியடைந்தால், நாட்டிலிருந்து நிச்சயமாக தூக்கி எறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025