நீ தண்ணீரை கொண்டு பீச்சி அடித்தால் நான் குடிக்க தண்ணீர் கொடுப்பேன் – இப்படிக்கு விவசாயி
வேளாண் சட்டங்களை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீர் பீச்சி அடித்த காவல்துறையினர். அதன் பின் விவசாயி செய்த நெகிழ்ச்சியான செயல்.
மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை இணைக்கும் 5 நெடுஞ்சாலைகள் வழியாக பயணித்து டெல்லியை சென்றடைவது என்பதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் திட்டமாகும்.
இதனையடுத்து, பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் விவசாயத் திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிற நிலையில், அந்த மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறி செல்ல முயன்றதால் பதற்றநிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சி அவர்களை விரட்ட முற்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த போராட்டத்தில், விவசாயி ஒருவர் போலீசாருக்கு காவல்துறைக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது இதயங்களை வென்றுள்ளது.
So what if policemen released cold water on farmers on a chilly day, that was their duty. Our Guru taught us to be humble, serve and share, what we have. It’s our duty. #FarmersDilliChalo #FarmersProtest pic.twitter.com/SIc7f2wlf5
— Gurpreet S. Sahota (@GurpreetSSahota) November 27, 2020