ரெனால்ட் இந்தியா தங்களது குறிப்பிட்ட கார்களுக்கு மே மாதத்திற்கான அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது கார்களில் புதிய அப்டேட்களுடன் கூடிய மாடல்களை கார் விற்பனை சந்தையில் இறக்குவதுண்டு. அதேபோல் கைவசம் உள்ள பழைய மாடல் கார்களுக்கான விற்பனையில் குறிப்பிட்ட சலுகைகளை அறிவிப்பதும் வாடிக்கையான ஒன்று.
ரெனால்ட் கார் நிருவனம் இந்தியாவில் தங்களது கார் விற்பனையில் நல்ல முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில் அந்நிறுவனம் புதுப்புது மாடல்களில் கார்களை இந்தியாவில் களமிறக்கி வருகிறது. அதன்படி குறைந்த விலை பட்ஜெட் கார் முதல் அதிக இடவசதியுள்ள கார் வரை அனைத்து விதங்களிலும் பல்வேறு ரக கார்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தங்களது குறிப்பிட்ட ரக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு மே மாத சலுகையாக அதிகபட்சமாக ரூ.62,000 வரை அறிவித்துள்ளது. அதன்படி ரெனால்ட் ட்ரைபர், ரெனால்ட் கிகர், மற்றும் ரெனால்ட் க்விட் கார்களுக்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாடல்கள் மற்றும் டீலர்ஷிப் ஸ்டோர்களைப் பொறுத்து இந்த சலுகை மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.
ரெனால்ட் ட்ரைபர்(Triber):
ஏழு இருக்கைகள் கொண்ட (MUV) அதிகபட்சமாக 62,000 ரூபாய் வரை சலுகை பெறலாம். இந்தச் சலுகை ரூ.25,000 ரொக்கத் தள்ளுபடியாகவும், ₹25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.12,000 கார்ப்பரேட் ஊழியர்களுக்கான தள்ளுபடியாகவும் கிடைக்கிறது.
கூடுதலாக, ரெனால்ட் ட்ரைபரின் 2022 மாடலில் வாங்குபவர்கள் ரூ.10,000 மதிப்புள்ள கூடுதல் பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்கிராப்பேஜ்(scrappage) திட்டத்தின் (பழைய வாகனங்களை ஸ்கிராப்பிற்கு அனுப்பும்) கீழ் ரூ.10,000 கூடுதல் தள்ளுபடியாகவும் கிடைக்கிறது.
ரெனால்ட் கிகர்(Kiger):
Renault Kiger இன் 2022 மற்றும் 2023 மாடல்கள் 62,000 ரூபாய் வரை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சலுகைகள் ரூ.25,000 ரொக்க தள்ளுபடி, ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் ரூ.12,000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் கிடைக்கிறது. மேலும் ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் கீழ் வாங்குபவர்கள் ரூ.10,000 கூடுதலாகப் பெறலாம்.
ரெனால்ட் க்விட்(Kwid):
2022 மாடலில் அதிகபட்சமாக 57,000 ரூபாய் சலுகையாகப் பெறலாம். இதில் ரூ.25,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.12,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும். Kwidல் ரூ.10,000 கூடுதல் பலன்களும் கிடைக்கிறது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…