கேரளாவில் திருமண அழைப்பிதழ்கள் இருந்தால் மட்டுமே ஜவுளி மற்றும் நகைக் கடைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கேரளாவில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அங்கு புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ,நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் அவர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.
அதன் பின்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கேரளாவில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பொது இடங்களில் நடை பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக இடைவெளியுடன் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து நடைபயிற்சி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலுமமேலும் ஸ்டேஷனரி கடைகள் திறப்பதற்கு தற்பொழுது அனுமதி இல்லை எனவும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் ஜவுளி, நகை மற்றும் செருப்பு கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நகை மற்றும் ஜவுளி கடைகளுக்குள் திருமண அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், மத்திய மாநில அலுவலகங்களில் ஜூன் 7ஆம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்கள் உடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…