திருமண அழைப்பிதழ் இருந்தால் ஜவுளி, நகைக் கடைகளுக்குள் செல்லலாம் – கேரள அரசு அறிவிப்பு!

Default Image

கேரளாவில் திருமண அழைப்பிதழ்கள் இருந்தால் மட்டுமே ஜவுளி மற்றும் நகைக் கடைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கேரளாவில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அங்கு புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 12 ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ,நிலையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் அவர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.

அதன் பின்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கேரளாவில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் பொது இடங்களில் நடை பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக இடைவெளியுடன் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து நடைபயிற்சி செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலுமமேலும் ஸ்டேஷனரி கடைகள் திறப்பதற்கு தற்பொழுது அனுமதி இல்லை எனவும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் ஜவுளி, நகை மற்றும் செருப்பு கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் திறக்க அனுமதிக்கப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் நகை மற்றும் ஜவுளி கடைகளுக்குள் திருமண அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுகளை  தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், மத்திய மாநில அலுவலகங்களில் ஜூன் 7ஆம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்கள் உடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்