12ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் எடுத்தால் கல்வி கட்டணம் இலவசம்.! ம.பி முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

Default Image

12ஆம் வகுப்பு அரசு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்தார். 

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று ஓர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதில், மத்திய பிரதேச மாநிலத்தில் , 12ஆம் வகுப்பு மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் கல்வி கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு அரசு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க உள்ளவர்கள், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் படிக்க உள்ளவர்கள் , பொறியியல் படிப்பு படிக்க உள்ளவர்கள், சட்டக்கல்லூரியில் படிக்க உள்ள மாணவர்கள் ஆகிய படிப்புகளுக்கு கட்டணத்தை அரசே செலுத்தும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய பிரதேச அரசு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் 75% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்