வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை… மணிப்பூரில் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு.!
அரசு அலுவலகத்திற்குச் செல்லாத ஊழியர்களுக்கு, வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்ற விதியை செயல்படுத்த மணிப்பூர் அரசு முடிவு.
மணிப்பூரில் கலவரத்திற்கு மத்தியில் அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் உரிய விடுமுறை ஏதும் அறிவிக்காமல் இருப்பதாய் அடுத்து, ‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என மணிப்பூர் அரசு கூறியுள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 அன்று கலவரம் வெடித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூரில் மெய்டேய் சமூகத்திற்கு பட்டியல் இன அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்து மெய்டேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே கலவரம் வெடித்து பெரும் மோதலைத் தூண்டியது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்லாமல் அறிவிக்கப்படாத விடுமுறையில் இருக்கும் ஊழியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுளள்து.
அதாவது வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை எனும் உத்தரவை பிறப்பிக்கவுள்ளதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மணிப்பூரில் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக பணிக்கு வர முடியாத ஊழியர்களின் விவரங்களை ஜூன் 28 ஆம் தேதிக்குள் அளிக்குமாறு, நிர்வாகச் செயலாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.