வாங்கிய நகைக்கு ரசீது இல்லையா ? அப்போ அபராதம் கட்டுங்க மத்திய அரசின் அடுத்த பிளான்
நம் வீட்டில் வைத்திருக்கும் நகைக்கு முறையான ரசீது இல்லையென்றால் அபராத வரியை செலுத்த வேண்டும் என அடுத்த பான்மதிப்பிழப்புக்கு தயாராகிவருகிறது மத்திய அரசு .
கடந்த 2016 இல் மோடி தலைமையிலான அரசு கருப்புப்பணத்தை மீட்க பணமதிப்பிழப்பு நடவெடிக்கையை மேற்கொண்டது அனால் அது தோல்வியில் முடிந்தது ,இதனால் கருப்புப்பணத்தை அனைவரும் தங்கமாக மாற்றியுள்ளனர் இதை மீட்க மோடி அரசு புதிய திட்டத்தை கொண்டுவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்நிலையில் ரசீது இல்லாமல் நம் வீடுகளில் இருக்கும் தங்கத்திற்கு அபராத வரியாக செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது .அவர்கள் திட்டத்தின் படி கருப்புப்பணத்தை தங்கமாக மாற்றி வைத்திருப்பர்களிடம் இந்த நடவடிக்கை பாய்ந்தால் பாராட்டலாம் ஆனால் நம் வீடுகளில் கண்டிப்பாக வாங்கிய நகைக்கான ரசீது இருக்காது மற்றொன்று பாரம்பரியமாக நகை வைத்திருப்பவர்கள் ரசீதுக்கு எங்கு செல்வார்கள்.
திருமணமான பெண்களின் தங்க நகைகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழே வைத்திருந்தால் அதற்கு இந்த திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆகையால் இந்த புதிய மத்திய அரசின் திட்டத்தால் நடுத்தர மக்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .