சுய ஊரடங்கை கடைபிடிக்கவிட்டால், ஏப்ரல் மாதத்தில் மருத்துவனை நிரம்பி வழியும் – இந்திய நுண்ணுயிர் மருத்துவர் சங்கம்
கொரோனா பாதிப்பு இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 22-ம் தேதி ஞாயிற்க்கு கிழமை ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மக்கள் இத்தனை சரியாக கடைபிடிக்கவில்லை என பிரதமர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 31 வரை சுய ஊரடங்கை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினாள் ஏப்ரல் மாதத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என இந்திய நுண்ணுயிர் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், 14 நாட்கள் சுய ஊரடங்கை நடத்தினால் கொரோனாவை விட்டு விரட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.