பயணிகள் கவனத்திற்கு..! இனிமேல் பேருந்துகளில் இப்படி செய்தால், பேருந்தில் இருந்து இறக்கி விடப்படுவீர்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அறிவுறுத்தலை மீறி, பேருந்துகளில் தங்களது மொபைலில் பாட்டு கேட்பவர்களை தாராளமாக கீழே இறக்கி விடலாம்.
கர்நாடகா : பொதுவாகவே பயணிகள் பேருந்தில் பயணிக்கும் போது பேருந்துகளில் பாடலை இயக்குவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் பேருந்துகளில் பாடல்கள் இயக்கப்படாத போது, சிலர் பொழுதுபோக்கிற்காக தங்களது மொபைலில் பாடல்களை போட்டு கேட்டுக்கொண்டு வருவதுண்டு. ஆனால், இந்த செயல் அருகில் இருப்பவர்களை எரிச்சலடைய செய்கிறது.
அவ்வாறு தொந்தரவுக்கு உள்ளான நபர் ஒருவர், கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது மொபைல் போன் ஸ்பீக்கரில் அதிகம் சத்தம் வைத்து பாட்டு மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்களை சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். அவர்களது அறிவுறுத்தலையும் மீறி செயல்படும் பயணிகளை தாராளமாக பேருந்தை விட்டு இறங்கி விடலாம் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.