இதை செய்தால் மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம்.! மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை.!

MansukhMandaviya

சமீப நாட்களாக நாட்டில் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது பெரியவர்களை விட 20 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பெருமளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஒருபுறம் கொரோனாவுக்கு பிறகு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ராஜுவ் ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பு அதிகமாகியுள்ளது என எந்தவித அறிவியல்பூர்வ அறிவிப்பும் இல்லை என எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சரியான காரணம் தெரியாததால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆனது விரிவான ஆய்வை நடத்தியது. தற்போது அந்த ஆய்வு முடிவுகளைக் குறிப்பிட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் மாரடைப்பு வரமால் தடுப்பதற்கான அறிவுறுத்தலையும் கூறியுள்ளார்.

அதன்படி குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சுக் மாண்டவியா, “கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடுமையான உடற்பயிற்சி அல்லது ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்யதால் திடீர் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே மாரடைப்பைத் தவிர்க்க கடுமையான வேலைகளை செய்யக்கூடாது.” என்று கூறியுள்ளார்.

சமீபத்த்தில் கூட, குஜராத் மாநிலத்தில் நடந்த நவராத்திரி விழாவின் போது ‘கர்பா’ நடனம் ஆடிய 10 க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் 20 வயதிற்கு உட்பட்டவர்கள். அதோடு அக்டோபர் மாதம் கெடா மாவட்டத்தில் உள்ள கபத்வஞ்சில் கர்பா நடனத்தின் போது 17 வயது சிறுவன் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்