குறைகளை கேட்கவில்லை என்றால் மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள் – கிரிராஜ் சிங்
உங்களது குறைகளை காது கொடுத்து கேட்கவில்லை என்றால், அவர்களை மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள். அதற்கு மசியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.
கிரிராஜ் சிங் கடந்த 2019 தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக தேர்வானார். பின் தற்போது மோடி அரசின் தலைமையிலான அரசில் மத்திய மீன்வளத்துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தொகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், அரசு அதிகாரிகள் பொது மக்களின் புகார்களை கேட்பதில்லை என்ற புகார்கள் எனக்கு வருகின்றது. இந்த சிறிய பிரச்சினைகள் எல்லாம் எனது கவனத்திற்கு கொண்டு வராதீர்கள். மக்களுக்கு சேவை செய்ய தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் உள்ளனர். அவர்கள் உங்களது குறைகளை காது கொடுத்து கேட்கவில்லை என்றால், அவர்களை மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள். அதற்கு மசியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.’ என்று பேசியுள்ளார்.