#Breaking:சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் கட்டணம் இலவசம் -தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு..!

Default Image

சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் வாகனங்களை கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் அதிகபட்ச நேரங்களில் கூட ஒரு வாகனத்திற்கு 10 வினாடிகளுக்கு மிகாமல் சேவை நேரத்தை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்(NHAI)வெளியிட்டது.அதன்படி,கடந்த பிப்ரவரியிலிருந்து இருந்து FASTAG முறை அறிமுகப்படுத்தப்பட்டு 100% பணமில்லா டோலிங்காக மாறியுள்ளது.

இந்நிலையில்,சுங்கசாவடிகளின் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறும்,இந்த குறிப்பிட்ட 100 மீட்டருக்குள் வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,இந்த 100 மீட்டரை தாண்டி மஞ்சள் கோட்டிற்கு வெளியே வாகனங்கள் வரிசைப்படுத்தி நின்றால்,அனைத்து வாகனங்களையும் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதைப்போன்று,சுங்கச்சாவடியை கடக்கவும்,சுங்கச்சாவடி தடைக் கம்பியை உயர்த்தவும் 10 வினாடிகளுக்கு அதிகமாக நேரம் எடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால்,இதுபோன்ற தருணங்களில் வாகனங்களை இலவசமாக கடக்க அனுமதித்தால்,FASTAG லிருந்து பணம் வசூலிக்கப்படாமல் இருக்குமா?என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும்,FASTAG ஆனது தானியங்கி முறையில் இயங்குவதன் காரணமாக,இந்த 100 மீட்டர் விவகாரத்தை மத்திய அரசின் ஐ.டி.தொழில்நுட்பத்துடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று டோல்கேட் முறை குறித்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்