#BREAKING: வெற்றியை கொண்டாடினால் வழக்கு பதிவு, இடைநீக்கம் செய்யுங்கள் -தேர்தல் ஆணையம் உத்தரவு..!
தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள பகுதியில் இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என 5 மாநில தலைமை செயலாளருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள பகுதியில் இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
Election Commission of India writes to Chief Secretaries of all States/UTs to “prohibit victory celebrations urgently”. ECI also directs that responsible SHOs and other officers must be suspended immediately and criminal and disciplinary actions must be initiated against them pic.twitter.com/4aEydSH42P
— ANI (@ANI) May 2, 2021