குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு, அந்த அளவு எங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் என தூக்கில் தொங்க வேண்டுமா?
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்களை தடுப்பூசி போடும் மாறும் அரசு அறிவித்து வருகிறது.
ஆனால் பல மாநிலங்களில் போதுமான அளவு தடுப்புச் இல்லாத காரணத்தினால் மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பு செலுத்துவதில் பல தடைகள் காணப்படுகிறது. இதுகுறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர் நாட்டில் ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் நீதிமன்றங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நான் உங்களிடம் கேட்கிறேன் குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு, அந்த அளவு எங்களால் தயாரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் என தூக்கில் தொங்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் தடுப்பூசி குறித்து எந்த ஒரு முடிவையும் அரசியல் லாபத்துக்காக அல்லது வேறு எந்த காரணத்துக்காகவும் எடுக்கவில்லை. மத்திய அரசு 100 சதவீதம் நேர்மையாக பணியாற்றி வருகிறது. அதில் பலவிதமான தடைகள் வந்தாலும் அதையும் எதிர்கொள்கிறது. சில விஷயங்கள் அங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கிறது. அதை எங்களால் சமாளிக்க முடியுமா? மக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க தேவையான அனைத்து வழிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அடுத்த சில நாட்களில் அதற்கான உறுதியான தகவல்கள் வெளிவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…