நடிகை சன்னி லியோன் மற்றும் இசையமைப்பாளர் சாகிப் தோஷி ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ வீடியோவை மூன்று நாட்களில் நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான கோஹினூர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே” என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு சன்னி லியோன் ஆபாச நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் ‘இந்து உணர்வுகளை’ புண்படுத்தியதாக பல தரப்பினர் தெரிவித்தனர்.
நடிகை சன்னி லியோனின் நடனப் பாடல் குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. தற்போது சன்னி லியோனின் பாடல் குறித்தும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், சில மதவெறியர்கள் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்துகிறார்கள். இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சன்னி லியோன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள முடியாது என்றார்.
அதே சமயம், இந்தப் பாடலை இன்னும் 3 நாட்களில் யூடியூப்பில் இருந்து நீக்காவிட்டால், சன்னி லியோன் மற்றும் இசையமைப்பாளர் சாகிப் தோஷி மீது எஃப்ஐஆர் பதிவு செய்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த பாடல் டிசம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…