அரசாங்க உத்தரவு இருந்தபோதிலும் ட்விட்டர் ஒருதலைப்பட்சமாக கணக்குகளைத் தடைசெய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்துக்கு விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதனால், விவசாயிகள் அனுமதியை மீறி செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்தனர். இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிகளில் இணைய வசதியை அரசு துண்டித்தது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் ட்வீட்டுகளை வெளியிடும் கணக்குகளை நீக்கு நீக்க மத்திய அரசு ட்விட்டருக்கு அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து, கடந்த திங்களன்று ட்விட்டர் அரசின் வேண்டுகோளின் பேரில் சில விவசாய ஆர்வலர்கள், சில எதிர்க்கட்சித் தலைவர்கள், பொருளாதார நிபுணர் 250 பேரின் ட்விட்டர் கணக்குகள் மற்றும் ட்வீட்களை தற்காலிகமாக நீக்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் மீண்டும் செயல்பட அனுமதித்தது.
இந்நிலையில், அரசாங்க உத்தரவை பின்பற்றவில்லை என ட்விட்டருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதுகுறித்து ட்விட்டருக்கு அனுப்பட்ட நோட்டீஸில், அரசாங்க உத்தரவு இருந்தபோதிலும் ட்விட்டர் ஒருதலைப்பட்சமாக கணக்குகளைத் தடைசெய்ததாகவும், ட்விட்டர் ஒரு இடைத்தரகர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம். அரசின் உத்தரவை பின்பற்ற மறுத்தால் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…