Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
உத்திரப் பிரதேச தம்பதியினர் தங்கள் விவாகரத்து வழக்கில், தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்து முறை சடங்குகள் எதுவும் தங்கள் திருமணத்தில் கடைபிடிக்கவில்லை என்றும், சான்றிதழ் பெற சில தேவைகள் இருந்ததால், நண்பர்கள், உறவினர்களை அழைத்து சிறிய விழா ஏற்பாடு செய்தோம் என்றும், அதன் அடிப்படையில், உ.பி திருமண விதிப்படி சான்றிதழ் பெற முயன்றோம் என்றும் கூறியுள்ளனர்.
அதே போல, இந்து திருமண சட்டங்களின் படி நடத்தப்படாத திருமணங்கள் குறித்தும், அதனை ஒழுங்குபடுத்த கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நடத்தப்பட்டு நேற்று பல்வேறு உத்தரவுளை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு வெளியிடப்பட்டது.
இந்து திருமண முறைப்படி, அக்னி சாட்சியாக நடைமுறையில் இருக்கும் சடங்குகள் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும் என்றும், இந்து திருமணம் சட்டம் பிரிவு 5இன் படி, திருமண விழா நடைபெற வேண்டும். இந்து மத சடங்குகள் பின்பற்றப்பட வேண்டும். பிரிவு 7இன் படி இந்த சடங்குகள் நடைபெறவில்லை என்றால் திருமணம் செல்லாது. பிரிவு 8இன் படி இந்துமுறைப்படி சான்றிதழ் பெறுவது எளிது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்னி சாட்சி போன்ற இந்து சடங்குகளின்படி ஒரு இந்து திருமணம் செய்யப்படாவிட்டால், அந்த திருமணம் இந்து திருமணமாக கருதப்படாது. ஆதலால், அந்த திருமணத்தை வேறுவிதமாக இந்திய திருமண சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும்படி பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்து திருமணம் பற்றிய சர்ச்சை எழும் போது, அந்த திருமண சடங்கின் செயல்திறனுக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான சடங்குகள் செய்யப்படாத நிலையில், அது இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரு திருமணமாக அதனை கருத முடியாது.
இந்து திருமண முறைப்படி திருமணம் செய்யப்படாத நிலையில், திருமண பதிவு அதிகாரி இந்து திருமண சட்டப்பிரிவு 8இன் கீழ் அத்தகைய திருமணத்தை பதிவு செய்ய முடியாது. எந்த மாதமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உரிய திருமண விதிகளை பின்பற்றாமல், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முடியாது. ஆண் பெண் என இருவரும், கணவன் – மனைவி என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால், திருமண சட்ட விதிகளின் கீழ் செல்லுபடியாகும்படி திருமணவிழாவை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருமணம் என்பது ஒரு புனித நிகழ்வு. இது சமூகத்தில் தம்பதியினரை மதிப்புமிக் நபர்களாக மாற வைக்கும் நிகழ்வு. எனவே, இது பற்றி ஆண்களும் பெண்களும், திருமணத்திற்கு முன்பே ஆழமாக சிந்திக்க வேண்டும். திருமணம் என்பது வெறும் பாடல் – நடனம் மற்றும் விருந்தளித்தல் நிகழ்வு மட்டுமல்ல. அல்லது வரதட்சணை, பரிசுகளை பரிமாற்றம் செய்யும் ஒரு சந்தர்ப்பமும் அல்ல. திருமணம் என்பது வணிக ரீதியிலான பரிவர்த்தனை அல்ல. இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உறவை ஏற்படுத்தி, அவர்களை குடும்பமாக திகழ வைக்கும் ஒரு முக்கிய நிகழ்வு.
திருமணம் பல்வேறு சமூகங்களுக்குள் ஓர் புதிய உறவுகளை ஏற்படுத்துகிறது. அது வாழ்நாள் முழுவதும் ஓர் கண்ணியத்தை நம்மில் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக மத சடங்குகள் நடத்தப்படும் போது அது ஒரு கலாச்சார நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
திருமணமான தம்பதியினருக்கான அந்தஸ்தை வழங்குவதற்கும், அவர்களுக்கான உரிமைகளை பெறுவதற்கும் திருமணங்களை பதிவு செய்வதற்கான வழிமுறையை வழங்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 7 இன் கீழ், மத சடங்குகளுக்கு ஒரு சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்து முறைப்படி திருமண சான்றிதழ் வேண்டும் என்றால் அவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…