வெளியுறவுக் கொள்கை சரியில்லை என்றால் ஐபோன், பெட்ரோல் விலை அதிகமாக இருக்கும்..! ஜெய்சங்கர் பேச்சு..
வெளியுறவுக் கொள்கை சரியில்லை என்றால் ஐபோன், பெட்ரோல் விலை மிக அதிகமாக இருக்கும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் பொது வெளிப்பாட்டின் ஒரு பகுதியாக டெல்லி என்ஐடி மாணவர்களுடன் உரையாடிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்ஜெய்சங்கர், வெளியுறவுக் கொள்கை மீதான முடிவுகள் சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை பாராட்டிய அவர், நீங்கள் பயன்படுத்தும் பெட்ரோலின் விலை, நாங்கள் நல்ல வெளியுறவுக் கொள்கையை உருவாக்குகிறோமா.? இல்லையா.? என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
EAM Jaishankar on Foreign Policy impacting everyday life- “The price of prtrol you pay, is decided on whether we make a good foreign policy or not. If we’d not done a very good foreign policy, petrol price would have been very much high, your cooking oil price would’ve been very… pic.twitter.com/VFQBWt2x6j
— Abhishek Jha (@abhishekjha157) July 3, 2023
வெளியுறவுக் கொள்கை சரியாக இல்லாவிட்டால், ஐபோன்கள், சமையல் எண்ணெய்கள் மற்றும் பெட்ரோல் விலைகள் மிக அதிகமாக இருக்கும். எனவே, வெளியுறவுக் கொள்கை மீதான முடிவுகள் உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்று கூறினார்.