“என்னிடம் மோதினால் பிஜேபி கதை முடிந்து விடும்” எச்சரித்த சந்திரபாபு நாயிடு…!!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயிடு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வாகனத்தில் புறப்பட்ட போது முதல்வர் சந்திரபாபு நாயிடு பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.அப்போது சந்திரபாபு நாயிடு வாகனத்தில் இருந்தவாறே உங்களுக்கு என்ன வேண்டும்..? ஆந்திர மாநில வளர்ச்சி பாழானத்துக்கு மோடிதான் கரணம். நரேந்திர மோடி செய்த துரோகத்தை மக்களிடம் சொன்னால் மக்கள் முகத்தில் முழிக்க முடியாது.என்னிடம் மோத நினைத்தால் பாஜக கதை முடிந்து விடும் என்று எச்சரித்தார்.