கிருமிநாசினியை 50 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுமா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!
கிருமிநாசினியை 50 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுமா?
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால், 1,97,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5604 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கிருமிநாசினியை 50-60 நாட்களுக்கு தொடர்ந்து உபயோகித்தால், சாரும் நோய்கள் ள்ளது புற்று நோய் ஏற்படும் என்று செய்திகள் வெளியானது.
இந்த செய்தி குறித்து மறுப்பு தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கிருமி நாசினி உபயோகிப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்பாடாது என்றும், 70% ஆல்கஹால் கலந்த கிருமி நாசினி கொரோனா நோய் தொற்றை தடுக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.