கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் அது கொரோனா மரணம்!
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் அது கொரோனா மரணமாகவே கருதப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வால் உயிரிழந்தவர்களுக்கு 50 ஆயிரம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது என உறுதி செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து உயிரிழப்பவர்களின் மரணம் கொரோனா மரணமாகவே கருதப்படும் எனவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படக்கூடிய இந்த 50 ஆயிரம் ரூபாய், கொரோனா உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து உயிர் இழந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.