புகார் அளித்தால் ரூ.500 பரிசு வழங்கப்படும்!

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், அதிகமாக மழை பெய்துள்ள இடங்களில், சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த பாதிப்பால் விபத்துக்கள் கூட ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில், மும்பை மாநகராட்சி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மும்பையில் சாலைகளில் உள்ள பள்ளம் பற்றி பொதுமக்கள் புகார் அளித்து, 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படவில்லை என்றால், புகார் அளித்தவர்களுக்கு ரூ.500 பரிசு தொகை அளிக்கப்படும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த திட்டம் நவ.7-ம் தேதி அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025