குழந்தை ஆதார் அட்டைக்கு இதை செய்யாவிட்டால் அது செல்லாததாகிவிடும்..!
குழந்தை ஆதார் அட்டையான பால் ஆதார் அட்டை 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஆதார் அட்டை இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய அடையாள சான்றாக விளங்குகிறது. புதிதாக சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி வேலை, அரசாங்க சலுகைகள் பெறுவது என அனைத்திற்குமே ஆதார் நிச்சயம் தேவைப்படுகிறது. தற்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு பால் ஆதார் என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெற்றோர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.
இதனை விண்ணப்பிக்க மருத்துவமனையில் குழந்தை பிறந்த சான்றிதழ் போதுமானது. அல்லது பெற்றோரின் ஆதார் அட்டையை வைத்தே இதனை விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு பால் ஆதார் அட்டை எனப்படும் குழந்தை ஆதார் அட்டை வைத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைக்கு 5 வயதான உடன் கட்டாயமாக ஆதார் மையங்களுக்கு சென்று குழந்தையின் கைவிரல் ரேகை, கருவிழி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
இல்லையெனில் அந்த பால் ஆதார் அட்டை செல்லாததாகிவிடும். குழந்தை 5 வயதிற்குள் இருந்தால் மட்டுமே இந்த பால் ஆதார் அட்டை செல்லுபடியாகும். அதனால் தற்போது ஆதார் அமைப்பு இது குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகிறது.
அதன்படி 5 வயதான குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் அக்குழந்தையின் பால் ஆதார் அட்டையை எடுத்து கொண்டு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு சென்று குழந்தையின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இல்லையெனில் அந்த பால் ஆதார் அட்டை செல்லுபடியாகாது.
#AadhaarChildEnrolment
Remember to update the biometrics of your child in #Aadhaar at the age of 5 years and again at the age of 15 years. These mandatory biometric updates for children are FREE OF COST.
Locate your nearest #AadhaarEnrolment Centre here: https://t.co/oCJ66DUBEk pic.twitter.com/0L94pTOLVV— Aadhaar (@UIDAI) July 29, 2021