ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார்.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற பேரணியில் காவல்துறையினருக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களை எதிர்த்து தான். அதுவும் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள எல்லைகள் மட்டும்தான். மத்திய அரசு இந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை இனியும் திரும்பப் பெறாவிட்டால், மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் மற்றும் கலவரம் பரவும் என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
ராகுல்காந்தியின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி, ‘ராகுல் காந்தி இந்திய மக்கள் மீது போரை அறிவித்து உள்ளார். பிரதமருக்கு எதிரான தனது அரசியல் செயல்பாடு பலன் தராவிட்டால் நாடே பற்றி எரியும் என எச்சரிக்கிறார். நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ராகுலின் வன்முறை அழைப்பை யாரும் கண்டு கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…