பிரேத பரிசோதனைக்கு பின்னும் உடலை வாங்க வரவில்லை என்றால் மின்தகன மயானத்தில் எரிக்க திட்டம்.!

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த சம்பத்தால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் குற்றச் சம்பவம் நடைபெற்று 8 வருடங்கள் கழிந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் நிறைவேற்றினார்.
இந்த நிலையில் தூக்கிலிடப்பட்ட 4 பேரின் உடலை திகார் சிறையில் இருந்து டெல்லி தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. பிற்பகல் 12 மணி முடிவுபெற்ற பின்னர் உடல்களை குற்றவாளிகளின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதையடுத்து குற்றவாளிகளின் குடும்பங்கள் உடல்களை தகனம் செய்வது அல்லது அடக்கம் செய்வது தொடர்பாக எந்த வகையிலும் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள் என்று எழுத்துப்பூர்வமாக ஒரு உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பின்னர் தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின்னும் உறவினர்கள் வாங்க வரவில்லை என்றால் மின்தகன மயானத்தில் எரிக்க திட்டமிட்டுள்ளனர் என தகவல் வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024