அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்தால் நான் எனது வீட்டை தருவேன்.! காங்கிரஸ் தலைவர் கார்கே பதில்.!
ராகுல்காந்தி அரசு பங்களாவை காலி செய்தால், அவர் தனது தாயாருடன் வாழ்வார். அல்லது அவர் என்னிடம் வரலாம். எனக்கான இரு வீட்டில் (அரசு பங்களா ஒன்று ) ஒன்றை காலி செய்கிறேன். – காங். தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குஜராத், சூரத் நீதிமன்றம். இதனால் ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல்காந்திக்கு நோட்டீஸ் :
எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செயல்பட்டதால், அவர் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய மக்களவை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ராகுல் காந்தியும் பதிலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நான் தருகிறேன் :
அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்யும் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லகர்ஜுன கார்கேவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், ‘மத்திய அரசு ராகுல் காந்தியை பலவீனப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். ராகுல்காந்தி அரசு பங்களாவை காலி செய்தால், அவர் தனது தாயாருடன் வாழ்வார். அல்லது அவர் என்னிடம் வரலாம். எனக்கான இரு வீட்டில் (ஒன்று அரசு பங்களா) ஒன்றை காலி செய்கிறேன். அதில் அவர் வசிக்கட்டும். என கூறியிருந்தார்.
6 மாதகால தாமதம் :
மேலும், ராகுல்காந்தியை பயமுறுத்தும், அச்சுறுத்தும் மற்றும் அவமானப்படுத்தும் அரசின் அணுகுமுறையை நான் கண்டிக்கிறேன். இது முறையான செயல் அல்ல. சில நேரங்களில், நாங்கள் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அரசு பங்களா ஒதுக்கப்படாமல் இருந்துள்ளோம். எனக்கு 6 மாதங்களுக்குப் பிறகுதான் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக மத்திய அரசு இதனை செய்கிறது என மல்லகர்ஜுனா கார்கே கடுமையாக விமர்சித்தார்.