பாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ஓட்டு கொடுங்கள். நாங்கள் வெறும் 70 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம் ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீர ராஜு என தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் விஜயவாடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீர ராஜு, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் மலிவான மதுபானத்திற்காக மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், பாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ஓட்டு கொடுங்கள். நாங்கள் வெறும் 70 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம். வருமானம் மிச்சம் இருந்தால், வெறும் 50 ரூபாய்க்கு வழங்குவோம் என தெரிவித்தார். மேலும், மாநில அரசு தரம் குறைந்த மதுபானங்களை அதிக விலைக்கு மக்களுக்கு விற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, ஆந்திராவில் ஆளுங்கட்சித் தலைவர்கள் பலரும் மது ஆலைகளை நடத்துகின்றனர். இந்த மது ஆலைகளில் தரமற்ற மதுவே தயாரித்து விற்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள ஒவ்வொருவரும் மதுவுக்காக மட்டும் மாதத்திற்கு ரூ. 12,000 வரை செலவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…