தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு போராடுவேன்.. முதல்வர் அசோக் கெலாட்

Default Image

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி,  தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான்  சபாநாயகர் அனுப்பினார்.

இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கூறியது.

இதனைதொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், கொரோனா காரணமாக சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் மறுப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர்.  இந்நிலையில், இன்று ஹோட்டலில்  காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டம்  நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் அசோக் கெஹ்லோட், தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன் சென்று போராடுவேன். குடியரசு தலைவரையும் சந்தித்து முறையிடுவேன். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை முறியடிக்க பாஜக மேற்கொள்ளும் சதி வெற்றி பெற விடமாட்டோம் என  கூறினார்.

நேற்று ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நான்கு பேருந்துகளில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் . அப்போது, ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் எம்.எல்.ஏ நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். கடந்த 2 வாரங்களாக அதிருப்தி எம்எல்ஏக்களால், ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் மூன்றாவது முறையாக முதல்வர் அசோக் கெலாட் ஆளுநரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்