நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், 2024 மக்களவைத் தேர்தலே இந்தியாவில் கடைசி தேர்தலாக மாறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனர் கார்கே பேசியதாவது, பாஜக ஒவ்வொருவருக்கும் அமலாக்கத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்புகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை மூலம் மக்களை மிரட்டுகிறது. பயத்தால் சிலர் நட்பை விட்டு விலகுகிறார்கள், சிலர் கட்சியை விட்டு விலகுகிறார்கள், சிலர் கூட்டணியில் இருந்து விலகுகிறார்கள்.
காங்கிரஸ் 2024க்கு அல்ல, 2029க்கு தயாராகி வருகிறது-ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம்..!
இந்தியா கூட்டணியில் உள்ளோரை பயமுறுத்தி பிரிந்துவிட்டனர். பயந்தவர்களால் ஜனநாயகத்தை கட்டமைக்க முடியாது. ஒருவர் விலகுவது இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தாது. இதுவே உங்களுக்கு வாக்களிக்கும் கடைசி வாய்ப்பு. அதன்பிறகு தேர்தலே இருக்காது. அதாவது மோடி மீண்டு பிரதமரானால் நாட்டில் தேர்தல் முறையே இருக்காது. இதனால், 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாட்டு மக்கள் வாக்களிப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கும்.
நாட்டின் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டுவதுடன் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தி விடுவார் மோடி. நரேந்திர மோடியுடனான நட்பால் நவீன் பட்நாயக் என்ன லாபம் அடைந்தார்? கேள்வி எழுப்பி விமர்சித்தார். மேலும், ராகுல் காந்தி நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார். ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் வெறுப்புகளை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் விஷம் போன்றது, அவை நமது உரிமைகளைப் பறிக்கின்றன என்றும் கார்கே கூறினார்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…