நான் பிரதமரானால் முதலில் இதை தான் செய்வேன் – ராகுல் காந்தி
நான் பிரதமரானால் முதலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மாணவர்களுக்கு இரவு விருந்தளித்தார். அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல் குறித்த வீடியோவை ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் மாணவர்கள் ராகுல் காந்தியிடம் நீங்கள் பிரதமரானால் என்ன உத்தரவை முதலில் பிறப்பிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு ராகுல்காந்தி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பேன் என பதிலளித்தார். பின் உங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, பணிவை கற்றுக் கொடுப்பேன். அதன் மூலம் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், இந்த நிகழ்வில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.
Interaction and dinner with friends from St. Joseph’s Matric Hr. Sec. School, Mulagumoodu, Kanyakumari (TN). Their visit made Diwali even more special.
This confluence of cultures is our country’s biggest strength and we must preserve it. pic.twitter.com/eNNJfvkYEH
— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2021