இவர்களுடன் இருந்திருந்தால் முதல்வராக நீடித்திருப்பேன் – குமாரசாமி பரபரப்பு.!
நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்துவிட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேச்சால் பரபரப்பு.
முன்னாள் கர்நாடக முதல்வரும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தலைவருமான எச்.டி.குமாரசாமி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது, காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மிகப்பெரிய தவறை செய்து விட்டேன். காங்கிரஸ் கட்சியுடனான எனது கூட்டணி காரணமாக 2006-2007 மற்றும் 12 ஆண்டுகளில் நான் சேர்த்து வைத்த நற்பெயரை எல்லாம் இழந்துவிட்டேன்.
காங்கிரஸுக்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால், நான் இப்போதுவரை முதல்வர் பதிவில் நீடித்திருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 2018-ல் முதல்வரான பிறகு ஒரு மாதத்தில் நான் ஏன் கண்ணீர் சிந்தினேன்? என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும். பாஜக 2013-ல் எனக்கு தீங்கு செய்யவில்லை, காங்கிரஸ் எனக்கு செய்தது தான் என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
இதனிடையே, ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி முன்பு காங்கிரஸ் கட்சியை ‘குதிரை வணிகம்’ என்று அழைத்திருந்தார். அரசியல் கட்சிகளைப் பிரிப்பதிலும், சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதிலும் காங்கிரஸ் திறமையானவர் என்றும் அதனால்தான் ‘குதிரை வர்த்தகம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.