”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு நாள் ஆன்மிக சுற்றுபயணத்தை இன்று துவங்கினார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை கும்பகோணம் சுவாமிமலை மற்றும் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்களை நேரில் சென்று தரிசனம் செய்தார்.
அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, இன்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கும் அவருக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்கள் முருகனின் அறுபடை வீடுகளில் தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேட்டியளித்துள்ளார். அப்பொழுது, விஜய் அரசியல் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடு நன்றாக இருக்க முருகனிடம் வேண்டிக்கொண்டேன், தமிழ்நாட்டுக்கு எத்தனை தலைவர்கள் வந்தாலும் பரவாயில்லை. விஜயால் தமிழ்நாட்டு நல்லது நடந்தால் சந்தோசம் தான்” என்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025