ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும் – பிரதமர் மோடி
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இன்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். அதாவது, மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் 20-க்கு பிறகு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில் ஊரடங்கில் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த பகுதிகளில் கொரோனா பரவ தொடங்கினால் மீண்டும் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார். இதையடுத்து ஏழை மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்று கூறியுள்ளார்.