“பாஜக வென்றால் நான் ட்விட்டரில் இருந்து விலகிக்கொள்கிறேன்”- பிரசாந்த் கிஷோர் சவால்!
பாஜக வென்றால் நான் ட்விட்டரில் இருந்து விலகிக்கொள்கிறேன் என பிரசாந்த் கிஷோர் பாஜகக்கு சவால் விடுத்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் நிபுணத்துவ வேலைகளை செய்து வருகிறார். மேற்குவங்க தேர்தலில் எப்படியாவது வெல்லவேண்டும் என பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர், பாஜக வென்றால் நான் ட்விட்டரில் இருந்து விலகிக்கொள்கிறேன் என சவால் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், பாஜக ஆதரவு ஊடகங்கள் சொல்வது போல பாஜக வெற்றிபெறவே முடியாது என கூறிய அவர், பாஜக இரட்டை இலக்கத்தை பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கின்றதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பாஜக வென்றால் தாம் ட்விட்டரில் இருந்து விலகிக்கொள்கிறேன் என சவால் விட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் மேற்குவங்கம் மட்டுமின்றி, தமிழகத்தில் திமுக கட்சிக்காகவும் அரசியல் நிபுணத்துவ வேலைகளை செய்து வருவது, குறிப்பிடத்தக்கது.