ICSE, ISC செமஸ்டர் 2 தேர்வு அட்மிட் கார்டு; எப்படி பதிவிறக்குவது? – இங்கே விபரம்!
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ஐசிஎஸ்இ (ICSE) மற்றும் ஐஎஸ்சி (ISC) தேர்வுகளுக்கான தேதிகளை ஏற்கனவே வெளியிட்டது.அதன்படி, ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 25 அன்று தொடங்கும் நிலையில்,ஐசிஎஸ்இ (10ஆம் வகுப்பு) தேர்வுகள் மே 20 ஆம் தேதியும், ஐஎஸ்சி தேர்வுகள் ஜூன் 6ஆம் தேதியும் முடிவடைகின்றன.
இந்நிலையில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) விரைவில் 2022 ஆம் ஆண்டுக்கான ICSE மற்றும் ISC தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகளை (admit cards) வெளியிட உள்ளது.
தேர்வுக்கு முன்னதாக அனைத்து ICSE 10 ஆம் வகுப்பு மற்றும் ISC 12 ஆம் வகுப்பு மாணவர்களும் கண்டிப்பாக அனுமதி அட்டைகளை வைத்திருக்க வேண்டும் எனவும்,மேலும்,இத்தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களுக்கும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://cisce.org/ இல் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுகளுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது.
அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்:
- அட்மிட் கார்டை பெற https://cisce.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் .
- பின்னர் “ICSE செமஸ்டர் 2 அட்மிட் கார்டு 2022 அல்லது ISC செமஸ்டர் 2 அட்மிட் கார்டு” என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு,தேவையான விவரங்களை நிரப்பவும்.
- உங்கள் ICSE மற்றும் ISC கார்டு திரையில் காட்டப்படும்.
- அதன்பின்னர்,உங்கள் அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும் செய்து கொள்ளலாம்.