நாடு முழுவதும் ICSE 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து.., CISCE அறிவிப்பு..!
சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த ஐ.சி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்துள்ளது.
கொரோனா சூழ்நிலையை அடுத்து சி.ஐ.சி.எஸ்.இ பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி அராத்தூன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், நாட்டில் கொரோனா தொற்றுநோயின் தற்போதைய மோசமான நிலைமை காரணமாக ஐ.சி.எஸ்.இ (பத்தாம் வகுப்பு) தேர்வு ரத்து செய்ய CISCE முடிவு செய்துள்ளது.
முதலில் மே 5 முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதாக வாரியம் அறிவித்திருந்தது. அதே நேரத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 8 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைக் கவனித்த கவுன்சில் கடந்த 16-ஆம் தேதி ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகளை ஒத்திவைத்தது.
தேர்வுகள் நடத்துவது குறித்த இறுதி முடிவு ஜூன் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்த்தக்கது.