ICSE 2022 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சற்று நேரத்தில் முடிவுகள் வெளியாகிறது..
ICSE 2022 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் இன்று மாலை 5:00 மணிக்கு வெளியிடப்படும். அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் ICSE 2022 முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
இது CISCE ஆல் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவு ஆகும். இதில் பருவம் 1, பருவம் 2 மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீட்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் இரண்டும் அடங்கும். ICSE அல்லது 10 ஆம் வகுப்பு மாணவர்களின் இறுதி மதிப்பெண் பட்டியல்கள் cisce.org மற்றும் results.cisce.org இல் கிடைக்கும்.
www.cisce.org சிஐஎஸ்சிஇயின் இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், முடிவுகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும். ICSE ஆண்டு 2022 தேர்வு முடிவுகளை அணுக, விண்ணப்பதாரர்கள் கோர்ஸ் விருப்பத்திலிருந்து ஐசிஎஸ்இஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து, தனித்துவமான ஐடி, குறியீட்டு எண் மற்றும் கேப்ட்சா போன்றவற்றை விண்ணப்பதாரர்கள் உள்ளிட வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் தேர்வாளர்கள் தங்கள் தனிப்பட்ட ஐடியை மெசேஜ் வழியாக ICSE 1234567 (ஏழு இலக்க தனித்துவ ஐடி) என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு 09248082883 செய்தியை அனுப்பவும்.