யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடி முதலீடு செய்ய முடிவு.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் கொண்டுவந்தது. பின்னர் வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது. மேலும் இந்த வங்கியை நெருக்கடியில் இருந்து மீட்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தற்போது இறங்கியுள்ளது. இதையடுத்து யெஸ் வங்கியின் 49% பங்குகளில் முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்குள் யெஸ் வங்கி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நிலைமை சீராகும் என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிலையில் யெஸ் வங்கியில் ரூ.7,250 கோடி முதலீடு செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்த நிலையில், தற்போது யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ வங்கி ரூ.1,000 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆக்சிஸ் வங்கி ரூ.600 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து எச்டிஎப்சி வங்கி ரூ.1,000 கோடியும், கோட்டக் மகேந்திர ரூ.500 கோடியும் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதனிடையே யெஸ் வங்கியின் புதிய இயக்குநர் பட்டியல் 7 நாட்களில் வெளியிடப்படும் என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)