3வயது சிறுவனுக்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதில் ‘வேறு இடத்தில்’ அறுவை சிகிச்சை.! உ.பி மருத்துவமனை உரிமம் ரத்து.!

Surgery

3வயது சிறுவனுக்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதில் ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்த உ.பி மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் பரேலியில் தனியார் மருத்துவமனையில் நாக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் மூன்று வயது சிறுவனுக்கு தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை (சுன்னத் வகையான அறுவை சிகிச்சை ) செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த புகாரின் பெயரில் சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், மருத்துவ ஊழியர்கள் கையெழுத்து வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட படிவத்தில் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது எனவும், அதில் கையொப்பமிடச் சொன்னதால் கையொப்பமிட்டோம் எனவும்அவர்கள் கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தவறுதலாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதா அல்லது அந்த சிறுவனுக்கு ஏற்கனவே ஆணுறுப்பில் ஏதேனும் பிரச்சனை இருந்ததா என விசாரணை தொடரும் என்று பரேலி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பல்வீர் சிங் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்