இளம் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கலின் 82 கோடிரூபாய் சொத்துக்கள் முடக்கம்.! அமலாக்கத்துறையினர் நடவடிக்கை.!
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைதாகி உள்ள ஜார்கண்ட் மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கலின் 82 கோடிகள் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கத்துறை செயலாளராக பணிபுரிந்த ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கல், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கமிஷன் பெற்று பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. தற்போது அவர் தனது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இவரது கணவர் சுமன் குமார் தொழிலதிபராகவும் ஆடிட்டர் ஆகவும் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிறுவனங்களின் சோதனையிட்டதில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அடுத்ததாக, இவர்களுக்கு சொந்தமான மருத்துவமனை, ஸ்கேன் மையம் என மொத்தமாக 82 கோடி ரூபாய் சொத்துக்கள் தற்போது அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.