ஐஏஎஃப் பயிற்சி விமானம் விபத்து..! இரண்டு விமானிகள் உயிரிழப்பு.!
தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியான ஏஎஃப்ஏவில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக பிலாடஸ் பிசி 7 எம்கே-II (Pilatus PC 7 Mk II) விமானம் புறப்பட்டது. திடீரென டூப்ரான் என்ற இடத்தில் உள்ள ரவெல்லி கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தெரிவித்த இந்திய விமானப்படை, விமானம் விபத்தானதில் இரு விமானிகளும் உயிரிழந்தனர். அவர்களுக்கு எங்களது ஆழந்த வருத்தங்கள். விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் இதுவரை இல்லை என்று கூறியுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானிகளின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில், “ஹைதராபாத் அருகே நடந்த இந்த விபத்தால் வேதனை அடைந்தேன். இரண்டு விமானிகள் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில், என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன.” என்று பதிவிட்டுயுள்ளார்.
Anguished by this accident near Hyderabad. It is deeply saddening that two pilots have lost their lives. In this tragic hour, my thoughts are with the bereaved families. https://t.co/K9RljlGu0i
— Rajnath Singh (@rajnathsingh) December 4, 2023