ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன்…எழுத, படிக்க தெரியாத மந்திரி பேட்டி…!!
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதை தொடர்ந்து சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் புதிய முதல்வராக கடந்த 17ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் புதிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார்.இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவையில் ஒரு பெண் உட்பட 9 பேருக்கு சட்டீஸ்கர் மாநில பொறுப்பு ஆளுநர் ஆனந்திபென் படேல் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இதில் சட்டீஸ்கர் மாநில
கோண்டா தொகுதி M.L.A கவாசி லக்மா, தன் கையில் இருந்த தாளை பார்க்காமல் ஆளுநர் கூறியதை சிறிதும் மாற்றமில்லாமல் அப்படியே கூறினார்.
கோண்டா தொகுதி M.L.A கவாசி லக்மா_விடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது , நான் மிகவும் ஏழைமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.வீட்டின் வறுமையால் என்னுடைய சிறுவயது முதலே பள்ளிக்கு சென்றதில்லை. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி எனக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது.
சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் என்னை விரும்புகின்றனர்.நான் பள்ளிக்கூடம் சென்றதில்லை என்றால் கூட இப்போது மந்திரி தான். என்னை போன்ற ஏழை மக்களின் வாழ்கை முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் என்று அமைச்சர் கவாசி லக்மா தெரிவித்தார்.