அடிபட்ட புலியைப் போன்று சினங்கொண்டு எழுவேன்…! மம்தா அதிரடி…!
மேற்கு வங்கத்திற்கு எதிரான அனைத்து சதித்திட்டங்களும் அழித்து ஒழிக்கப்படும், அடிபட்ட புலியை போன்று சினங்கொண்டு எழுவேன் மேற்கு வங்க மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, நந்திகிராமில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் இருந்தவண்ணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கொல்கத்தா பரப்புரையில் ஈடுபட்ட அவர், தூய்மையற்ற சக்திகள் அழிக்கப்பட்டு நல்லவை மேலோங்கட்டும் என்றும், மேற்குவங்க மக்கள் மீண்டும் தங்களுக்கு வாக்களித்தால் ஜனநாயகம் அவர்களிடம் திரும்புவதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்திற்கு எதிரான அனைத்து சதித்திட்டங்களும் அழித்து ஒழிக்கப்படும், அடிபட்ட புலியை போன்று சினங்கொண்டு எழுவேன் என தெரிவித்துள்ளார்.