ஊழல் செய்தவர்களை நான் கடுமையாக தண்டிப்பேன்..! பாட்னா எதிர்கட்சிகள் கூட்டம் குறித்து பிரதமர் மோடி விமர்சனம்..!
பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தினை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் மங்குபாய் சி படேல், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தினை விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெருமான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன.
ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து ஒருவரையொருவர் காப்பாற்ற, பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர். எனது உத்தரவாதம் என்னவென்றால், அவர்களில் யாரையும் நான் விட்டுவைக்க மாட்டேன். மோசடி செய்தவர்களை கடுமையாக தண்டிப்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.