படுக்கையை பகிர்ந்தால் தான் ஆக்சிஜன் தருவேன் – இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

Default Image

தன்னுடன் படுக்கையை பகிர்ந்தால் தான் ஆக்சிஜன் தருவேன் என அண்டை வீட்டுக்காரர் தனது தோழியின் தங்கையிடம் கூறியதாக பெண்மணி ஒருவர் தனது ஆதங்கத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் பலர் தற்போது கொரோனாவால் உயிரிழப்பதை விட ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாளுக்கு நாள் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். எனவே ஆக்சிஜன் தேவை நாடு முழுவதும் அதிகரித்திருப்பதால் ஆக்ஸிஜன் வைத்திருப்பவர்கள் ஆக்சிஜன் தேவைக்காக தங்களை நாடுபவர்களிடம் பல்வேறு முறைகளில் கொள்ளையடிக்கின்றனர். ஒருபுறம் பணத்தால் கொள்ளையடிப்பது இருக்க மறுபுறம் மானபங்கம் படுத்தக்கூடிய நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் கூட ஒரு இளம்பெண்மணிக்கு நடந்த கொடுமை குறித்து ஒரு பெண்மணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது இளைய சகோதரி போன்ற வயதுடைய ஒரு பெண்மணி அவரது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவருக்கு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக்கூடிய அண்டை வீட்டு நபரிடம் சென்று ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் அந்த நபர் அதற்காக தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் ஆக்சிஜன் தருவேன் என கூறியுள்ளார். இப்பொழுது அந்தப் பெண்மணி என்ன செய்வார்? தந்தையை காப்பாற்றுவதற்காக அவருக்கு இணங்கி விடுவதா, அல்லது தனது மானம் தான் முக்கியம் என நினைப்பாரா? எப்படி இந்த மனிதர்களால் இது போன்ற இப்படி நடந்து கொள்ள முடிகிறது என தனது ஆதங்கத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி குறிப்பு தற்போது பல்வேறு தரப்பட்ட நபர்களிடமிருந்து விமர்சனங்களை எழுப்பி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்